மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

அதென்ன விஜய் ‘அண்ணா’?

அதென்ன விஜய் ‘அண்ணா’?

விஜய் எப்போதுமே ஆச்சரியங்களுக்குக் குறைவில்லாத நபர். மனதில் தோன்றுவதை உடனே செய்துவிட வேண்டும் என நினைப்பவர் என்பதால், எங்கெல்லாம் விஜய்யைக் காண முடியாது என நினைக்கிறார்களோ, அங்கெல்லாம் அவரைக் காண்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அப்படி விஜய் செய்த ஒரு செயலினால் ‘இதனால்தான் இவரை அண்ணா என்கிறோம்’ என விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத பொக்கிஷங்களில் ஒருவர் நடிகர் நாசர். எப்போதும் சிரித்த முகத்துடனும், இளமையான சிந்தனைகளுடனும் காணப்படும் அவருக்குள்ளும் ஒரு துயரம் குடிகொண்டதைத் தமிழகம் அறியும். அவரது மகன் ஃபைசல் 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து, தற்போது மீண்டு வருகிறார். அவரது பிறந்த நாளான நேற்று (02.12.18) நடிகர் விஜய் நேரில் சென்று அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்.

விஜய் நேரில் வந்ததால் மகனின் மகிழ்ச்சி பல மடங்கு அதிகரித்ததைக் கண்ட நாசரின் மனைவியும், ஃபைசலின் தாயுமான கமீலா “அன்பு மகன் ஃபைசலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இன்று விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடி உனது கனவு நிறைவேறிவிட்டது. இதைவிட அதிகம் கேட்டுவிட முடியாது. எல்லாம் வல்ல இறைவன் உனக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கட்டும்” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018