மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

வாராக் கடன் சொத்துகளை ஏலம்விட்ட எஸ்பிஐ!

வாராக் கடன் சொத்துகளை ஏலம்விட்ட எஸ்பிஐ!

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் வங்கி வாராக் கடன் பிரச்சினையால் மூன்று தனியார் நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்யவுள்ளது.

ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று நீண்டகாலமாக திருப்பிச் செலுத்தாமல் உள்ள சோனா அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட், எம்சிஎல் குளோபல் ஸ்டீல், ஜெயஸ்வால் நெகோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் சொத்துகளை ஏலம்விட்டு அந்நிறுவனங்கள் பெற்ற கடன்களைத் திரட்ட அவ்வங்கி முடிவு செய்துள்ளது. வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் இந்த ஏலம் நடத்தப்படவுள்ளதாக ஸ்டேட் வங்கி தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

டிசம்பர் 13ஆம் தேதி இந்த ஏலத்தை மின்னணு முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வங்கி தெரிவித்துள்ளது. மேற்கண்ட மூன்று சொத்துகளை ஏலத்தில் விடுவதன் மூலம் ரூ.2,110.71 கோடி பணத்தை மீட்க ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது. முன்னதாக நவம்பர் 22ஆம் தேதி ரூ.1,019 கோடி மதிப்பிலான பணத்தை மீட்க 11 செயல்படா சொத்துகளை ஸ்டேட் வங்கி ஏலம் விட்டது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018