மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் போலீஸ் கைது!

பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் போலீஸ் கைது!

சென்னை வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வாசு கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாசு, மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். ஜாதாபுரம் பகுதியில் உள்ள தனது குடியிருப்புக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த, 10 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்ததும், வாசு தப்பி ஓட முயன்றுள்ளார்.

எனினும், அவரை துரத்தி பிடித்த மக்கள் வில்லிவாக்கம் போலீசில் ஒப்படைத்துள்ளனர். இருப்பினும் அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இந்தத் தகவலை உயரதிகாரிகள் கவனத்துக்கு எடுத்துச்சென்ற பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாசுவைப் பிடித்து விசாரணை செய்த வில்லிவாக்கம் போலீசார், அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். வேலியே பயிரை மேய்வது போல், உதவி ஆய்வாளரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018