மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் அட்வைஸ்!

பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் அட்வைஸ்!

பாகிஸ்தான், தீவிரவாதத்தைத் தனியாக எதிர்க்க முடியவில்லை எனில் இந்தியாவின் உதவியைக் கோரலாம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்குப் பாகிஸ்தான் தொடர்ந்து அழைப்புவிடுத்து வருகிறது. ஆனால், தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக இருக்க முடியாது என்று கூறி பாகிஸ்தான் அழைப்பை இந்தியா நிராகரித்து வருகிறது. சமீபத்தில் இந்திய ஊடகவியலாளர்களைச் சந்தித்த இமரான் கான், “காஷ்மீர் விவகாரத்தில் ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது. இந்தியாவிடம் இருந்து நேர்மறையான பதில் கிடைக்கப் பொதுத் தேர்தல் வரையில் காத்திருக்க தயார்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 2) ராஜஸ்தானில் செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஜம்மு காஷ்மீர் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பயங்கரவாதம் மட்டும்தான் பிரச்சினை. பாகிஸ்தான் அதைப் பற்றித்தான் ஆலோசிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், பாகிஸ்தான் பிரதமரிடம் ஒன்றே ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ஆப்கானிஸ்தானில், தீவிரவாதம் மற்றும் தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா உதவியுடன் போர் நடைபெறுகிறது அதுபோன்று, தீவிரவாதத்துக்கு எதிராகத் தனியாகப் போரிட முடியவில்லை என்றால் இம்ரான் கான் இந்தியாவின் உதவியைக் கேட்கலாம் என்று கூறியுள்ளார். இந்தியாவில் தீவிரவாதம் குறைந்துள்ளதாகவும். அடுத்த சில காலங்களில் மாவோயிஸம் முற்றிலும் குறையும் என்று தெரிவித்தார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018