மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

பாடத்தில் இருப்பது அனைத்தும் உண்மையில்லை!

அம்மாவை பரியால தொட முடியல. அம்மாவும் அதுக்கு வருத்தப்படலை. அம்மா இங்கே வந்தது பரிக்கு மிக முக்கியமான விஷயங்களைக் கத்துக்கொடுக்க. அதனால் ஓடிவந்த பரியைச் சமாதானப்படுத்தி பேச ஆரம்பிச்சாங்க.

“உனக்கு அமெரிக்காவோட கதை சொல்லியிருக்கேன்ல பரி? இங்கே எப்படி சாதி பெரிய அதிகாரமோ, அப்படி அங்கே நிறம் அதிகாரம். கறுப்பா இருக்கவங்க எல்லாரும் வெள்ளையா இருக்கவங்ககிட்ட அடிமையா இருந்தாங்க.”

பரிக்கு அந்த கதை நினைவுல இருந்தது. ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்து வந்த பழங்குடிகளை அடிச்சு துன்புறுத்தி கப்பல்கள்ல ஏத்திக்கிட்டு வந்து, பண்ணை வேலைகளையும் வீட்டு வேலைகளையும் செய்ய வெச்சாங்க.

ஸ்கூல் பாடத்துல கொலம்பஸ் கண்டங்களை கடந்து பல தீவுகளையும் நாடுகளையும் கண்டுபிடிச்சார்னு பாராட்டுனதை பரி அம்மாக்கிட்ட சொன்னப்ப, ‘கொலம்பஸ் ஒரு கொலைகாரன். அவனாலதான் பல பழங்குடிகள் இனம் அழிஞ்சு அடிமையாச்சு’னு அம்மா சொன்னாங்க. அப்போதான் பள்ளி பாடத்துல இருக்குறது எல்லாமே உண்மையில்லைனு பரி புரிஞ்சுக்கிட்டான்.

இதெல்லாம்விட மிகப்பெரிய ஆச்சரியமான கதையையும் அம்மா சொன்னாங்க. “வாஸ்கோடா காமா இந்தியாவைக் கண்டுபிடிச்சததாலதான், பிரிட்டிஷ்காரங்க நம்மல அடிமைப்படுத்துனாங்க.”

“கொலம்பஸ் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியும் அமெரிக்கா அங்கேதான் இருந்தது. வாஸ்கோடா காமா கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியும் இந்தியா இங்கேதான் இருந்தது. அவங்க அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும்தான் கண்டுபிடிச்சாங்க.”

இந்த கதைகளை எல்லாம் அம்மா சொல்லும்போது பரிக்கு அப்போ புரியல. இப்போ எல்லாம் புரிய ஆரம்பிக்குது.

“அப்போ இது உலகம் பூரா இருக்கிற பிரச்சினையா? உலகம் பூரா இருக்குற பிரச்சினைக்குத் தனி தனி மனுஷங்க கிட்ட எப்படி தீர்வு கிடைக்கும்?”னு பரி கேட்கும்போது அம்மா சிரிச்சாங்க.

இந்த கேள்விதான் பரியின் பதிலே...

- நரேஷ்

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018