மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

தைவானில் தமிழுக்கு அங்கீகாரம்!

தைவானில் தமிழுக்கு அங்கீகாரம்!

தைவானில் நடைபெற்ற ஆசிய பசிபிக் நுரையீரல் மருத்துவர்கள் சங்க மாநாட்டில் தமிழ்மொழிக்கு அங்கீகாரம் கிடைத்ததாக பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறார் கடலூரைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் கலைக்கோவன்.

ஆசிய பசிபிக் நுரையீரல் மருத்துவர்கள் சங்கத்தில், உலகம் முழுவதிலுமிருந்து 5ஆயிரம் மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மாநாடு நடத்துவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதியான இன்று வரை மாநாடு நடைபெற்றுள்ளது.

தைவானில் உள்ள உலகத்தின் உயரமான தைபே கட்டிடத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த கடலூர் மருத்துவர் பால.கலைக்கோவனை மின்னம்பலம் சார்பில் தொடர்புகொண்டு பேசினோம்.

அப்போது பேசிய அவர், தைவானில் தமிழுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகப் பெருமிதமாக கூறினார். ”சுமார், 90 நாடுகளிலிருந்து 3500 நுரையீரல் மருத்துவர்கள் கலந்துகொண்டார்கள்,இந்தியாவிலிருந்து 65 மருத்துவர்கள் கலந்துகொண்டார்கள். அதில், நான் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ரங்கநாதன், சந்திரசேகர் என மூன்று பேர் கலந்துகொண்டோம்.

அங்கு, உலக மொழிகளில் 15 மொழிகளில் மட்டுமே வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டன. அதில் இந்திய மொழிகளில் இந்தி மற்றும் தமிழ் மொழிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது சிறப்புக்குரியது. தமிழ் மொழி இடம் பெற்றிருந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. காரணம் தெலுங்கு, பெங்காளி, மலையாளம் போன்ற மொழிகள் பேசும் மருத்துவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டாலும் அவர்கள் மொழிக்கான பதாகைகள் இடம்பெறவில்லை. தைவானில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

காலத்தால் அளவிட இயலாத தொன்மை வாய்ந்த தமிழ், சர்வதேச அளவில் மதிக்கப்படுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது.

மாநாடு பற்றியும் நுரையீரல் நோய்கள் பற்றியும் கலைக்கோவன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”உலக அளவில் நுரையீரல் நோய் பாதிப்பு உள்ளானவர்களில் 20 சதவிகிதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அதாவது பத்து கோடி பேர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நுரையீரல் நோய்க்குக் காரணம் காற்று மாசு, நெருக்கமாக வாழ்வது, நோய்பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதது தான். இந்தியாவில் நுரையீரல் மருத்துவர்கள் பற்றாக்குறையும் இதற்கு முக்கிய காரணம்” என்று குறிப்பிட்டார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018