மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

500 கோடி கடன் தந்த சீரடி அறக்கட்டளை!

500 கோடி  கடன் தந்த சீரடி அறக்கட்டளை!

சீரடி சாய்பாபா அறக்கட்டளை மகாராஷ்டிர அரசுக்கு ஐந்நூறு கோடி ரூபாயை வட்டியில்லாக் கடனாக வழங்க உள்ளது என அந்த கோயிலின் அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசு கோதாவரி ஆற்றில் இருந்து அகமதுநகர் மாவட்டத்துக்குக் கால்வாய் வெட்டி நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர்த் தேவையை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஐந்நூறு கோடி ரூபாயை வட்டியில்லாக் கடனாக வழங்க சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

வடக்கு மராட்டியம் மற்றும் மரத்வாடா பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக குறைந்த அளவே மழை பொழிவு இருந்தது. இதனால் அந்த பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. சுமார் 5 கிலோமீட்டர் வரை, தண்ணீருக்காக கிராம மக்கள் நடந்து செல்வதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மரத்வாடா பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது அத்துடன் மாநிலத்தின் பல பகுதிகளில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது என்று அம்மாநில அரசே தெரிவித்துள்ளது.

கோதாவரி ஆற்றில் இருந்து மரத்வாடா பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை விரைவாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவினாலும், நிதிபற்றாக்குறையின் காரணமாக அத்திட்டத்தை கிடப்பில் போட்டது அரசு.

தற்போது விவசாயிகள் பயன் பெறும் வகையிலான இத்திட்டத்தை முன்னெடுக்க நிதிஉதவி வழங்க சீரடி அறக்கட்டளை முன்வந்துள்ளது. இதற்காக 500 கோடி ரூபாயை மராட்டிய அரசுக்கு வட்டியில்லா கடனாக வழங்க முன்வந்துள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018