மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

நவம்பர்: ஜிஎஸ்டி வசூல் நிலவரம்!

நவம்பர்: ஜிஎஸ்டி வசூல் நிலவரம்!

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் சற்று குறைந்து ரூ.97,637 கோடியாக உள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அக்டோபர் முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையில் 69.6 லட்சம் பேர் ஜிஎஸ்டி 3ஆர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மாநில அரசுகளுக்கு ரூ.11,922 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.97,637 கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய மாதத்தில் ரூ.1,00,710 கோடி வசூல் செய்யப்பட்டிருந்தது.

நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரையில் ரூ.23,070 கோடி மாநில ஜிஎஸ்டியாகவும், ரூ.16,812 கோடி மத்திய ஜிஎஸ்டியாகவும், ரூ.49,726 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாகவும் வசூல் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இ.ஒய்.டேக்ஸ் பார்ட்னர் அபிஷேக் ஜெயின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “முந்தைய மாதத்தை விட ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு இதுவரையில் வசூலாகியுள்ள மாதாந்திர சராசரி தொகையை விட இது அதிகமேயாகும். ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வசூல் என்ற இலக்கை விரைவில் நாம் எட்டுவோம்” என்றார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018