மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

சென்னை: ஒவ்வொரு 50 மீட்டருக்கும் கண்காணிப்பு கேமரா!

சென்னை: ஒவ்வொரு 50 மீட்டருக்கும் கண்காணிப்பு கேமரா!

சென்னை மாநகரில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு 50 மீட்டருக்கும் ஒரு கண்காணிப்பு கேமரா நிறுவப்படும் என மாநகர போலீஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று (டிசம்பர் 1) தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையிலுள்ள அண்ணா மேம்பாலத்திலும், கதீட்ரல் சாலையிலும், டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையிலும் 446 கண்காணிப்பு கேமராக்களைத் திறந்து வைத்த ஏ.கே.விஸ்வநாதன் பேசுகையில், கண்காணிப்பு கேமராக்கள் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் மிகவும் உதவிகரமாக உள்ளன. நகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவதற்கு உதவிடும் புரவலர்களுடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம்.

சென்னை மாநகர் முழுவதும் 3இல் இருந்து 4 லட்சம் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி மொத்த நகர் பகுதியையும் கண்காணிப்பு கேமராக்களின் பார்வையில் கொண்டுவரும் திட்டம் உள்ளது என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பு கேமராக்களை நிறுவிடும் பணியை மேற்கொண்டனர். இதற்கிடையே, சென்னை காவல் துறை கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் பகுதியைக் கண்டறிய உதவிடும் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றையும் நிறுவியுள்ளனர்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

ஞாயிறு 2 டிச 2018