மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

சென்னை திரைப்பட விழா: போட்டியிடும் படங்கள்!

சென்னை  திரைப்பட விழா: போட்டியிடும் படங்கள்!

16ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ்ப் படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

16ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், காசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

இதன் தொடக்க விழா கலைவாணர் அரங்கத்தில் டிசம்பர் 13ஆம் தேதி மாலை 6:15 மணிக்கு நடைபெறுகிறது. இதன் நிறைவு விழா டிசம்பர் 20ஆம் தேதி மாலை 6:15 மணிக்கு கலைவாணர் அரங்கம் அல்லது தேவி தியேட்டரில் நடைபெறும் என்று விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விழாவில் 59 நாடுகளில் இருந்து 159 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. இதில் பங்கு பெறும் சிறப்பு பிரதிநிதிகளாக ரசூல் பூக்குட்டி (சவுண்ட் டிசைனர்), இயக்குநர் ஷில்பா (சிங்கப்பூர்), இயக்குநர் அபு ஷேஹெட் எமோன் (வங்காள தேசம்), இயக்குநர் நைனா சென் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் திரைப்படமாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி'ஆர் விருது வென்ற, ஷாப் லிப்டர்ஸ் (ஜப்பான்) திரைப்படம் திரையிடப்படுகிறது.

தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் விண்ணப்பிக்கப்பட்ட 20 படங்களில் இருந்து 12 படங்கள் தேர்வாகியுள்ளன.

போட்டியிடும் 12 தமிழ்த் திரைப்படங்கள்:-

1. 96

2. அபியும் அனுவும்

3. அண்ணனுக்கு ஜே

4. ஜீனியஸ்

5. இரவுக்கு ஆயிரம் கண்கள்

6. இரும்பு திரை

7. கடைக்குட்டி சிங்கம்

8. மெர்குரி

9. பரியேறும் பெருமாள்

10. ராட்சசன்

11. வடசென்னை

12. வேலைக்காரன்

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018