மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

தேர்தலுக்காக சர்ஜிக்கல் ஸ்டிரைக்: ராகுல்

தேர்தலுக்காக சர்ஜிக்கல் ஸ்டிரைக்: ராகுல்

பிரதமர் மோடி சர்ஜிக்கல் ஸ்டிரைக்கைத் தேர்தலுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் அமித் ஷாவும் நேற்று (டிசம்பர் 1) பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராகுல் காந்தியின் ,மதம் குறித்து அக்கட்சியினரே குழம்பியுள்ளனர் என்று விமர்சித்திருந்தார். இவரது விமர்சனத்தைத் தொடர்ந்து உதய்ப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நமது பிரதமர், தான் இந்து என்று கூறுகிறார். ஆனால், இந்து மதத்தின் அடித்தளத்தைக்கூட புரிந்து கொள்ளவில்லை. என்ன மாதிரியான இந்து அவர்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் சொத்தாக, பிரதமர் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நினைக்கிறார். நரேந்திர மோடி போல, மன்மோகன் சிங்கும், மூன்று முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ராணுவத்தினர் இதை ரகசியமாகவே இருக்கட்டும் என்று கூறியதால் மன்மோகன் சிங் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். ஆனால், தற்போது, மோடி அவ்வாறு இல்லை உத்தரப் பிரதேச தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை பயன்படுத்திக் கொண்டார்.

மோடி, ராணுவத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தனக்குத்தான் தெரியும் என நினைக்கிறார். அதுபோன்று, விவசாயம், வெளியுறவு ஆகிய துறைகளில் அந்தந்த அமைச்சர்களைக் காட்டிலும் தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைக்கிறார். அனைத்து அறிவும் தன் மூளையில் இருந்தே வருவதாக அவர் கருதுகிறார்” என்று பிரதமரை ராகுல் கடுமையாக விமர்சித்தார்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, வங்கிகளின் வாராக் கடன் ரூ.2 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடியாக உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறிப்பிட்ட 15 தொழிலதிபர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

அமித் ஷா கண்டனம்

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018