மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள்!

3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள்!

ரஷ்யாவிலிருந்து 3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசின் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்யும் கவுன்சில் நேற்று (டிசம்பர் 1) ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த அக்டோபரில் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பி1135 ரக கப்பல்களும் வாங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன், (பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்யும் கவுன்சில் அளித்த ஒப்புதலின் அடிப்படையில்) ரஷ்யாவில் கட்டப்பட்டுவரும் இரண்டு கப்பற்படைக்கான கப்பல்களும், பிரம்மோஸ் ரக ஏவுகணைகளும் வாங்க முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவுகளின் அடிப்படையில் ரஷ்யாவிலிருந்து 3,000 கோடி ரூபாய்க்கு ஆயுத தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,பிரம்மோஸ் ஏவுகணைகள் நன்றாகப் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணைகளாகும். அவை கப்பல்களிலிருந்து ஏவப்படும் முதன்மை ஆயுதங்களாகும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018