மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

சந்தோஷமாக வாழ்கிறேன்: குரு மகள் விருதாம்பிகை

சந்தோஷமாக வாழ்கிறேன்: குரு மகள் விருதாம்பிகை

திருமணத்துக்குப் பிறகு தான் மகிழ்ச்சியோடு வாழ்வதாக குருவின் மகள் விருதாம்பிகை கூறியுள்ளார்.

வன்னியர் சங்கத்தின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு -சொர்ணலதா தம்பதியினருக்கு, திருமணமாகி சில ஆண்டுகள் வரை குழந்தை இல்லாத நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்தவர்தான் விருதாம்பிகை. இவருக்கு அடுத்து கனலரசன் பிறந்தார். விருதாம்பிகை, கனலரசு இருவரையும் சென்னையில் படிக்க வைத்து வந்தவர் குருவின் மூன்றாவது தங்கை சந்திரகலா. குருவின் இரு பிள்ளைகளுக்கும் தாய் அரவணைப்பைவிட அத்தை அரவணைப்பில் வளர்ந்ததுதான் அதிகம் என்கிறார்கள் குருவின் குடும்பத்தார்.

சிறு வயதிலிருந்தே நீ எனக்குத்தான், நான் உனக்குத்தான் என்று மனோஜ் - விருதாம்பிகை இருவரும் பசுமரத்தாணி போல திருமண ஆசையை மனதில் பதிய வைத்திருக்கின்றனர். குரு இறந்த ஆறு மாதங்களில் தாய் ஒருபக்கம், பிள்ளைகள் ஒருபக்கம் எனப் பிரிந்துவிட்டனர். தாய் ஆசியில்லாமல் அத்தை சந்திரகலா மகன் மனோஜை திருமணம் செய்துகொண்டார் மகள் விருதாம்பிகை.

திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியர் தந்தை வாழ்ந்த வீட்டுக்கும் சமாதிக்கும் சென்றதிலிருந்து கஜா புயலைவிட வலுவாக வீசிவருகிறது இவர்களின் கல்யாணப் புயல். இதுகுறித்து செய்திகளை கடந்த இரண்டு நாட்களாக நாம் தொடர்ந்து பதிவு செய்துவருகிறோம்.

இதற்கிடையே, “விருதாம்பிகையின் விருப்பம் இல்லாமல், அவரை மனோஜ் திருமணம் செய்துகொண்டார். சொத்துகளைப் பறிக்க முயற்சி செய்து வருகிறார்கள்” என்று குருவின் மனைவி சொர்ணலதா ஊடகங்களிடம் பேசிவருகிறார். அவருக்குத் துணையாக பாமக நிற்பதையும் பார்க்கமுடிகிறது.

இந்த நிலையில் சொர்ணலதாவின் குற்றச்சாட்டு உண்மையா என்பதை அறிய, விருதாம்பிகையைத் தொடர்புகொண்டோம்.

திருமணத்துக்குப் பிறகு நன்றாக இருக்கிறீர்களா?

சந்தோஷமாக இருக்கிறேன்.

உங்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் நடந்ததாக, உங்களின் தாயார் சொல்கிறாரே?

நாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்று அம்மாவுக்கே தெரியும். நான் பள்ளிக்கு போகும்போதும் சரி, கல்லூரிக்கும் போகும்போதும் சரி மாமாதான் அழைத்துவந்து விடுவார். அத்தை அரவணைப்பில்தான் நான் வளர்ந்தது, படித்தது எல்லாம்.

உற்றார், உறவினர்களை அழைத்து பொறுமையாக திருமணம் செய்திருக்கலாமே?

எங்களுக்கும் ஆசைதான், சூழல் சரியில்லை. அப்பா (குரு) இருந்திருந்தால் தைரியமாக இருந்திருப்போம். திருமணம் செய்த பிறகு எங்களுக்கு எவ்வளவு நெருக்கடி என்று பாருங்கள். என் அப்பா இப்போது இருந்திருந்தார் என்றால் மனோஜ் மாமாவைத் திருமணம் செய்துகொண்டதற்கு அவ்வளவு சந்தோஷமடைந்திருப்பார். அம்மா உலகம் புரியாமல் பேசிவருகிறார். அவர் பின்னால் உணர்வார் என்று தெரிவித்தார்.

காடுவெட்டி கல்யாணப் புயலுக்குப் பின்னால் சொத்துகளுக்கான போட்டிகள் இருப்பதை மட்டும் உணர முடிந்தது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018