மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது!

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது!

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முதற்கட்ட ஆய்வுகள் நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்குத் தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆணையத்தின் அனுமதிக்குத் தடை விதிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் பிரதமரைத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தித்து, ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்குத் தடை விதிக்க அழுத்தம் தர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று (டிசம்பர் 1) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. முழு ஆய்வறிக்கை எடுப்பதற்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி எடுக்கும்போதுதான் அதன் சாதக பாதக அம்சங்கள் தெரியவரும். அதற்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேகதாதுவில் அணை கட்டுவது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அந்த அளவுக்குச் சூழ்நிலைகள் வராது என்று நம்புகிறேன். முழு ஆய்வறிக்கை எடுப்பதற்கு கர்நாடகா தயாராகிவருகிறது. இது சம்பந்தமான விஷயங்களைப் பின்னால் பார்ப்போம்” என்று தெரிவித்தார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018