மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 நவ 2018

பட்டாசு: வழக்கு போட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு!

பட்டாசு: வழக்கு போட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு!

பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று பட்டாசுகளுக்குத் தடை விதிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தீபாவளி பண்டிகையின்போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. இதன்படி இந்த உத்தரவை தமிழக அரசு காலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமுமாக பிரித்து பட்டாசு வெடிக்க தமிழக மக்களை அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே பட்டாசு வெடித்ததற்காக வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன எனவும், அவற்றை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (நவம்பர் 13) ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கொமதேக சட்டமன்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தீபாவளியன்று தமிழக அரசு அறிவித்திருந்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாகத் தமிழகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கடந்த ஆண்டு தீபாவளியின்போதே பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டதை நாம் அறிவோம்.

ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற சூழல் கிடையாது. டெல்லியில் சில வழக்குகள் போடப்பட்டாலும் இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் எந்தவொரு வழக்கும் போடப்படவில்லை. பட்டாசுகள் இந்த நேரத்திற்குள்தான் வெடிக்க வேண்டுமென்ற கட்டுப்பாடு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் இதுவே முதன்முறை. தமிழக அரசு அறிவுறுத்திய நேர விவரம் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “குறிப்பாக தீபாவளியன்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் சிறுவர்கள் தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது சிரமம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். தமிழக அரசு அறிவுறுத்திய நேரத்தை மீறி சிறுவர்கள் பட்டாசுகள் வெடித்ததற்காக பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. பல வருடங்களாக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே அன்றாட வாழ்க்கை முறையில் மக்கள் சரிவர பின்பற்ற முடியாத சூழல் இருக்கும் நிலையில், முதன்முறையாக பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பின்பற்றியிருப்பது பாராட்டுதலுக்குரியது.

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 14 நவ 2018