மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 நவ 2018

வேறுபாடுகளை களைய வேண்டும்: அரவிந்த் பனகாரியா

வேறுபாடுகளை களைய வேண்டும்: அரவிந்த் பனகாரியா

ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தங்களுக்குள் நிலவும் வேறுபாடுகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார்.

இதுகுறித்து பனகாரியா நவம்பர் 8ஆம் தேதி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்திய ரிசர்வ் வங்கியானது, அமெரிக்க ஃபெடரல் வங்கியைக் காட்டிலும் குறைவான சுதந்திரத்தையே கொண்டுள்ளது. அமெரிக்க அரசுக்கு இணையான சுதந்திரத்தை அந்நாட்டின் ஃபெடரல் வங்கி பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான வேறுபாடுகளை இருதரப்பும் பேசித் தீர்க்க வேண்டும். அதுதான் தேசிய நலனுக்குப் பாதுகாப்பானது” என்று கூறியுள்ளார்.

அரவிந்த் பனகாரியா தற்போது கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியல் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அமெரிக்காவில் ஃபெடரல் வங்கியும், அமெரிக்க அரசும் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதையும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக 2008ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் இருதரப்பும் இணைந்து சூழலைச் சிறப்பாக எதிர்கொண்டதாக அவர் கூறினார். தேசிய நலனைக் கருத்தில்கொண்டு இந்தியாவிலும் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

வெள்ளி 9 நவ 2018