மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 நவ 2018

பாஜகவில் காங்கிரஸ் சபாநாயகர்!

பாஜகவில் காங்கிரஸ் சபாநாயகர்!

மிசோரம் மாநிலத்தின் சட்டசபை சபாநாயகரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஹிபேய் பாஜகவில் இன்று (நவம்பர் 5) இணைந்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் வருகிற நவம்பர் 28ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பு அடைந்திருக்கும் நிலையில், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் இம்முறை ஆட்சியை பிடிக்க மும்முரம் காட்டும் பாஜக, தனது பண பலம் மூலம் கிறிஸ்துவ தலைவர்கள் உட்படப் பலரை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதாக காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் ஹிபேய் காங்கிரசின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பாஜகவில் இணைந்துள்ளார்.

தனது ராஜிநாமா கடிதத்தை அம்மாநில துணை சபாநாயகர் லால்ரினா வர்மாவிடம் இன்று அளித்தார். 40 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையிலிருந்து இதுவரை ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளனர்.

ஏழு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய ஹிபேய் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாலக் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த வாரம் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர், இன்று பாஜகவிற்கு இடம்பெயர்ந்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் மிசோரமில் மட்டும் தான் காங்கிரசின் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் ஹிபேய் ராஜிநாமா செய்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

திங்கள் 5 நவ 2018