மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

காய்ச்சலால் குழந்தைகள் பாதிப்பு: அமைச்சர்!

காய்ச்சலால் குழந்தைகள் பாதிப்பு: அமைச்சர்!

இந்த ஆண்டில், காய்ச்சலால் குழந்தைகள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், இன்று (அக்டோபர் 26) அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். காய்ச்சல் சிறப்பு வார்டில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கான வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பேசிய விஜயபாஸ்கர், காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றும், அலட்சியம் காட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். “இந்தாண்டு குழந்தைகளுக்கு தான் அதிகளவில் டெங்கு பாதிப்பு உள்ளது. ராஜீவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் 19 பேர் டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனால், குழந்தைகளுக்கு அதிகளவில் நீர்ச்சத்துமிக்க உணவுகளைக் கொடுக்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அளிக்க வேண்டாம்” என்று அவர் கூறினார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிற நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்தைப் பேணும் வகையில் சுத்தப்படுத்தும் பணி நாளை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், நாளை ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று காய்ச்சலுக்காகச் சிகிச்சை அளிக்கப்படும் சிறப்பு வார்டுகளை ஆய்வு செய்யவுள்ளனர். நடமாடும் மருத்துவக் குழுவினர் கிராமம் கிராமமாகச் சென்று கண்காணிக்கவுள்ளனர்” என்று அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018