மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சண்டக்கோழி 2: வசூல் ரிப்போர்ட்!

சண்டக்கோழி 2: வசூல் ரிப்போர்ட்!

நடிகர் விஷால் ஆக்‌ஷன் ஹீரோவாகவும், வியாபார முக்கியத்துவமுள்ள நடிகர்கள் பட்டியலில் இடம்பெறவும் காரணமான படம் சண்டக்கோழி. அதன் இரண்டாம் பாகம் 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு அக்டோபர் 18 அன்று வெளியானது.

விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, லால் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் அனைத்து உரிமைகளும் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் 57 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக கூறப்படுகிறது. விஷால் நாயகனாக நடித்த படங்களில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படம் சண்டக்கோழி 2. தமிழக தியேட்டர் உரிமை 18 முதல் 19 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகள் விநியோக முறையிலும், மதுரை, சேலம், நெல்லை, திருச்சி ஏரியாக்கள் அவுட் ரேட் அடிப்படையிலும் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. அவுட்ரேட் முறையில் படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் 30% முதல் 40% வரை நஷ்டம் உறுதி என்கிறது விநியோகஸ்தர்கள் வட்டாரம்.

விஷால் நடித்து வெளியாகும் படங்களுக்கு அரசியல் கடந்து வெகுஜன பார்வையாளர்கள் இருந்தனர். அரசியல் பேச தொடங்கிய பின்பு அந்த பார்வையாளர்களை இழந்திருக்கிறார் விஷால். அத்துடன் சண்டக்கோழி படத்திற்கு வலுவான போட்டியாளராக வட சென்னை முதல் நாள் களமிறங்கியதும் மொத்த வசூலைப் பாதித்திருக்கிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018