மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சென்னை: 61,000 உரிமங்கள் ரத்து!

சென்னை: 61,000 உரிமங்கள் ரத்து!

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய 61,000 பேரின் வாகன ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்யுமாறு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

சிக்னலில் நிற்காமல் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவிரைவாகச் செல்லுதல், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கரம் வாகனம் ஓட்டுதல், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல் போன்றவை போக்குவரத்து விதிமீறல்களாகும். இந்த விதிமுறைகளை மீறிய 61,504 பேரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்னை போக்குவரத்துக் காவல் துறை பரிந்துரை செய்துள்ளது.

வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசியதற்காக 8,810 பேரின் உரிமங்களும், அதிவேகத்தில் சென்றதற்காக 2,917 பேரின் உரிமங்களும், அதிக பாரங்களை ஏற்றிச்சென்றதற்காக 430 பேரின் உரிமங்களும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 10,651பேரின் உரிமங்களும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றியதற்காக 9,664 பேரின் உரிமங்களும், சிக்னல்களை மதிக்காமல் சென்ற 29,032 பேரின் உரிமங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் உரிமங்களை ரத்து செய்யுமாறு, சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018