மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

மல்லையாவின் வில்லங்கமான பங்குகள்!

மல்லையாவின் வில்லங்கமான பங்குகள்!

விஜய் மல்லையா நிறுவனத்தின் பங்குகளை யாரும் வாங்க வேண்டாம் என்று வருமான வரித் துறையினர் எச்சரித்துள்ளனர்.

கிங்ஃபிஷர் நிறுவனரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடம் ரூ.9,000 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றது அனைவரும் அறிந்ததே. தற்போது இங்கிலாந்தில் இருக்கும் அவரைக் கைதுசெய்து இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. மறுபுறம் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகளை விற்பனை செய்து கடனை வசூலிக்கும் முயற்சியில் இந்திய வங்கிகள் ஈடுபட்டுள்ளன. 2017ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திலேயே மல்லையாவின் நிறுவனம் சார்ந்த பங்குகளை விற்பனை செய்து ரூ.6,203 கோடியைத் திரட்ட கடன் மீட்புத் தீர்ப்பாயம் அறிவிப்பு விடுத்திருந்தது.

அதன் ஒருபடியாக, யுனைட்டட் ரேசிங் & பிளட் ஸ்டாக்ஸ் பிரீடர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மல்லையாவுக்குச் சொந்தமாக உள்ள பங்குகளை விற்பனை செய்ய கடன் மீட்புத் தீர்ப்பாயம் செப்டம்பர் 29ஆம் தேதி அறிவிப்பு விடுத்திருந்தது. இந்நிறுவனத்தில் மல்லையாவுக்குச் சொந்தமாக உள்ள இந்த 41.52 லட்சம் பங்குகளை பொதுமக்கள் யாரும் வாங்கக் கூடாது என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது. அவ்வாறு இப்பங்குகளை வாங்குபவர்கள் எதிர்வரும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கத் தயாராகிக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018