ஒரு கரண்டி மாவுல எத்தனை தோசை: அப்டேட் குமாரு


வழக்கமா எதையாவது பேசி வீடியோவுக்கு லைக்ஸ் வாங்குற மதிமாறனை இன்னைக்கு வச்சு செய்றாங்க நெட்டிசன்ஸ்.‘வாயிலேயே வடை சுடுறதை கேள்விபட்டுருக்கேன், தோசை சுடுறதை இப்ப தான் பார்க்குறேன்’னு இன்னைக்கு முழுக்க அத்தனை பேரும் டைம்லைன்ல வெரைட்டியா தோசை சுட்டுகிட்டு இருக்காங்க. தோசையிலயுமா சாதி இருக்கு அப்ப சட்னி சாம்பார்லாம் லிஸ்ட்ல வராதான்னு கேட்குறாங்க. ஹோட்டல்ல மாஸ்டர் விதவிதமா தோசை சுடுறாரே அவரை எந்த லிஸ்ட்டுல சேர்க்குறதுன்னு கமெண்ட்ல டிஸ்கஸ் பண்றாங்க. ஒருவேளை ஹோட்டல் தோசைக்கல்லை சமதர்மத்தின் குறியீடா அறிவிச்சிடலாமாங்குற அளவுக்கு விஷயம் சீரியஸ் ஆகியிருக்கு. காலையில வீட்டுல கொஞ்சம் சவுண்டா பேசிட்டேன், தோசைக்கல்லு மாதிரியே தோசை சுட்டுட்டுவந்து கொடுத்தாங்க இதுக்கு என்ன அர்த்தம்ன்னு அவர்ட்ட யாராவது கேட்டு சொல்றீங்களா.. தோசையை அப்புறம் சுடலாம் இப்ப அப்டேட்டை பாருங்க.
@rahimgazali
மேல் முறையீடு என்பதே எடப்பாடி அரசுக்கு தினகரன் செய்யும் மறைமுக உதவிதான்.
@pachaiperumal23
மோடியின் ஒப்பனை செலவு 15 லட்சம் - செய்தி.
ஆத்தீ. எங்க ஊர்ல கல்யாணத்துக்கு பெண்ணோட மேக்கப் செலவே 2000 தான் சார்வாள்.
@mufthimohamed1
கமல்ஹாசன்,விஜய்சேதுபதி இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரு வேற்றுமை, கமல் தெளிவா குழப்புவாரு, விஜய்சேதுபதி குழப்பாம தெளிவாக்கிருவாரு.
@sultan_Twitz
மேற்கு வங்க மாநிலத்தில் 100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 21 வயது இளைஞர் - செய்தி
வட நாட்டு இளைஞர்களால் நாடே பெருமை கொள்கிறது..?! - மஹான் மோடி
@udaya_Jisnu
2k kids: "லவ் பன்ற விஷயத்த, அப்பாகிட்ட சொல்ல பயமா இருக்கு ணா"
90s kids: "சைக்கிள்ல போகும்போது, செருப்பு கழண்டு விழுந்ததையே சொல்ல பயந்தவங்க நாங்க, போவியா"
@smhrkalifa
எப்பா இந்த தீர்ப்பையும்,இந்த ஆட்சியையும் வேனும்னாலும் சகிச்சிக்கிறோம், தயவுசெய்து இந்த எடப்பாடியை மட்டும் இரும்பு மனிதர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்காதிங்க..தாங்க முடியல.
@Kozhiyaar
முன்னெல்லாம் காதல் தோல்வினா தாடி வச்சான்!!
இப்பெல்லாம் சிம்பிளா ஸ்டேடஸ் வச்சிட்டு முடிச்சிக்கிறாங்க!!!
@yaar_ni
18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தினகரன் அணி முடிவு
ஆக மொத்துல இடைத்தேர்தல் நடத்த விட்டபோறது இல்ல அதானே !!
@HAJAMYDEENNKS
மனிதனுக்கு முக்கியமானது கண்,காது,மொபைல் என்றாகிவிட்டது !
@Thaadikkaran
விசில் அடித்த மாணவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று விமர்சித்த இளையராஜா# அப்போ பஸ் கண்டக்டர் எல்லாம் யாரு
@HAJAMYDEENNKS
ட்ரெஸ் எடுக்க ,பட்டாசு வாங்க,ட்ராஃபிக் போலீஸ்க்கு தீபாவளி பரிசளிக்க என பட்ஜெட் ஒதுக்க வேண்டியிருக்கிறது நடுத்தர வர்க்கத்தினருக்கு !
@shivaas_twitz
தமிழகத்தின் மெகா சீரியல்கள்:
1. 18 எம்.எல்.ஏ தகுதி நீக்கம்
2. சிலை கடத்தல் விசாரணை
3. ஜெயலலிதா மரண விசாரணை
4. விரைவில் கட்சி தொடங்கும் ரஜினி
5. விரைவில் ஆட்சி கவிழும்
&
6. தாமரை மலர்ந்தே தீரும்..!
@amuduarattai
செய்தி: டெண்டர்களை முடிவு செய்வதில் முதல்வர், அமைச்சர்களுக்கு தொடர்பு இல்லை. - அமைச்சர் தங்கமணி.
இதையும் பாஜக தான் முடிவு செய்யுமா..!?
@19SIVA25
18 எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்ய முடிவு - செய்தி
இனி தேர்தல் நடந்த மாதிரிதான்..! சாமிக்கு நேரம் நல்லாதான் இருக்கு
@ajmalnks
என்னையும் எனது ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது - ரஜினி
2.0 ரிலீஸாகப் போகுது போல.
@mymindvoice
பகிரப்படும் சுவாரசியங்களற்றவையில் தான் இருக்கிறது உறவின் சுவாரசியமே.
@Kozhiyaar
எந்த பிரச்சனையும் அசால்ட்டா தீர்த்து வைக்கிற நபரால் கூட சுடு தண்ணீரையும் பச்சை தண்ணீரையும் சரியான பதத்தில் கலந்து குளிக்க முடியாது!!!
@ajmalnks
டெங்கு,பன்றி காய்ச்சலில் அரசு மருத்துவமனைகளின் அலட்சிய போக்கால் பெரியதொரு வருமானத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும்.
@mekalapugazh
ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர்கள் டிவி சீரியல் பார்ப்பதில்லையாம்..
ஒரு ஆய்வுச்செய்தி.
இதற்கெல்லாம் ஆய்வு வேற செய்வார்களா என்ன..ட்விட்டரில் ஆர்வமாக இருப்பவர்கள் வேறெந்த வேலையுமே செய்ய மாட்டாட்கள் என்பது உலகறிந்த உண்மையாயிற்றே.
@HAJAMYDEENNKS
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - உச்சநீதி மன்றம் உத்தரவு #
இதை கேட்டவுடன் எடப்பாடிக்கு குளிர் காய்ச்சல் வந்திருக்குமே !
@gips_twitz
ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்பினை வெளியிட்டு 10 மாதம் நிறைவு! - செய்தி
அரசியல் என்ன பிரசவமா 10 மாசத்துல நிறைவு பெற வருச கணக்கா ஆகும்யா ...
-லாக் ஆஃப்