மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் அதிகாரி விளக்கம்!

இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் அதிகாரி விளக்கம்!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்கூட்டியே இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டுள்ளார்

தகுதி நீக்க வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன், 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவித்தார்.

இதையடுத்து 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 26) செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு விவரம் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பின் நகலுக்காக காத்திருக்கிறோம். இந்திய தலைமை தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவெடுக்கும். ஏராளமான நிர்வாக சிக்கல்கள் உள்ளன. அதையெல்லாம் பார்த்துதான் தயாராக இருக்கிறோமா என்று கூறமுடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவை போதுமான அளவு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் நடக்காமல் முன்கூட்டியே இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடத்துவது வேறு விவகாரம். இதில், தலைமை தேர்தல் ஆணையம் சொல்வது போன்றுதான் செய்ய முடியும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாமா என்பதை ஆய்வு செய்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018