மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

தேனி எஸ்பி விளக்கம் தர வேண்டும்!

தேனி எஸ்பி விளக்கம் தர வேண்டும்!

போலீஸ் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட 4 பேரை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில், தேனி மாவட்ட எஸ்பியிடம் விளக்கம் கேட்டுப் பதிலளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி காமாட்சிபுரத்தைச் சேர்ந்த பாஞ்சலி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்தார். கடந்த 19ஆம் தேதியன்று, பாஞ்சாலியின் மகள் பூங்கொடியின் வீட்டுக்கு 15 பேர் வந்தனர். பூங்கொடி, அவரது கணவர், ஒன்றரை வயதுக் குழந்தை கீர்த்திகா உள்ளிட்ட 4 பேரை, அவர்கள் அழைத்துச் சென்றதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் யார் என்றும் தெரியவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போலீஸ் என கூறி அழைத்துச் செல்லப்பட்ட நான்கு பேரையும் கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிடுமாறு பாஞ்சாலியின் சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018