மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சீஸரின் மனைவியைப் போல் சிபிஐ இருக்க வேண்டும்!

சீஸரின் மனைவியைப் போல் சிபிஐ இருக்க வேண்டும்!

சீஸரின் மனைவியை போன்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக சிபிஐ உயர் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இந்தியாவின் முக்கிய அமைப்பான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலால், இருவரையும் கட்டாய விடுப்பில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுப்பியுள்ளது. இதனால் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ” மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு எதிரான புகார்களை விசாரித்து இரு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் இடைக்கால சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் நாகேஸ்வர் ராவ் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 26) தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “சிபிஐயில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் அதன் நம்பகத்தன்மையை அரித்துவிட்டது. நேர்மை காக்கப்பட வேண்டும் என்ற நல்லநோக்கில் இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் மீது விசாரணை நடத்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டு, விசாரணை முடியும் வரை அவர்கள் பணியில் இருந்து விலகி இருக்கக் கோரியது. இன்று உச்ச நீதிமன்றம் நியாயத்தன்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்பது, ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான விளைவுகளை உண்டாக்கக்கூடியது.

.சிபிஐயில் நடைபெறும் பிரச்சனை தொடர்பாக எந்தத் தனி நபர் மீதும் அக்கறையோ, எதிர்ப்போ அரசுக்கு இல்லை. சிபிஐயின் நோக்கம் மற்றும் நம்பத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதே அரசின் நோக்கம். மத்திய கண்காணிப்பு ஆணையம் நேர்மையான, பாரபட்சமின்றி விசாரணை நடத்தும் என்று நம்புகிறோம். உண்மைகள் வெளி வர வேண்டும் என்பது தான் நாட்டின் விருப்பம்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018