மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

போக்குவரத்து ஊழியர்களுக்கு 20% போனஸ்!

போக்குவரத்து ஊழியர்களுக்கு 20% போனஸ்!

தமிழக அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்கப்படுமென்று அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தகுதி வாய்ந்த 1,44,045 ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவிகித போனஸ் மற்றும் 11.67 சதவிகித கருணைத் தொகை என்று மொத்தம் 20 சதவிகித தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 215 கோடியே 99 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து உயர்ந்துவரும் டீசல் விலையினால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தினை ஈடு செய்கின்ற வகையில், அரசின் சார்பில் வழங்கப்பட்டு வந்த மானியத்தினை மாதந்தோறும் தொடர்ந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 20.01.2018 முதல் 30.09.2018 வரையிலான காலத்திற்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினை ஈடு செய்யும் பொருட்டு 198 கோடியே 66 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியினைச் சந்தித்து வருவதால், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் பணப் பயன்களை வழங்கிட இயலாத நிலை ஏற்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2018 மார்ச் வரையிலான நிலுவையிலுள்ள பணப்பயன்களை வழங்கிடும் வகையில், 251 கோடியே 2 லட்சம் ரூபாயை அரசு வழங்கியுள்ளது.

1,113 ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதியும், 1,576 ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடையும், 1,837 ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஈட்டிய விடுப்புத் தொகையும், 714 ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையும் வழங்கப்படுவதோடு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 118 ஓய்வு பெற்ற பயனாளிகளும் பயன்பெறுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018