மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சிம்பு வழியில் புதிய பிரபலம்!

சிம்பு வழியில் புதிய பிரபலம்!

ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராதாமோகன் இயக்க ஜோதிகா, விதார்த்,லக்‌ஷ்மி மஞ்சு உள்ளிட்டோர் நடிக்கும் படம் காற்றின் மொழி. இந்தியில் இயக்குநர் சுரேஷ் திரிவேனி இயக்கி நடிகை வித்யா பாலன் நடித்திருந்த ‘தும்ஹரி சுலு’வின் தமிழ் ரீமேக்கான இதில் வித்யா பாலன் நடித்திருந்த ஆர்ஜே ரோலில் ஜோதிகா நடிக்கிறார். ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இதற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்ற பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.

நடிகர் சிம்பு ஏற்கெனவே இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இணைந்திருந்தார். இந்நிலையில் காமெடி நடிகரான யோகி பாபுவும் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகத் தற்போது இப்பட தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. சிம்புவும், யோகி பாபுவும் இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் படத்திலும் இணைந்து நடித்துவருகின்றனர். தொடர்ச்சியாக பல படங்களில் காமெடி ரோலில் கலக்கிவரும் யோகி பாபு காற்றின் மொழியிலும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. யோகி பாபுவின் காதலுக்கு ஜோதிகா உதவுவதுபோல இதில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

காற்றின் மொழி அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படலாம் எனும் எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் இருந்துவந்தது. ஆனால் பல படங்கள் தங்களின் வெளியீட்டுக்காக போட்டிபோட்டுக்கொண்டு வரிசையில் நிற்பதால் தீபாவளிக்குப் பின்னர் இதை வெளியிடுவது என படக்குழு சமீபத்தில் முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018