வர்த்தக மோசடி: நிறுவனங்களுக்கு அபராதம்!


பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 10 நிறுவனங்களுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
2010 ஏப்ரல் முதல் 2011 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மும்பை பங்குச் சந்தையின் வழியாக நடந்த பரிவர்த்தனைகளை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி ஆய்வு நடத்தியது. அந்தக் காலகட்டத்தில் நடந்த பரிவர்த்தனைகளில் மோசடிகள் நடந்துள்ளதா என்ற அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி 10 நிறுவனங்களின் பரிவர்த்தனைகளில் மோசடிகள் அல்லது தவறுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி சஞ்சய் ஜேதலால் சோனி, குருபா சஞ்சய் சோனி, குருனால் கோபால்தாஸ் ரானா, திரேம்குமார் தரண்தாஸ் அகர்வால் ஆகிய நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், ஜே.எம்.சோனி கன்சல்டன்சி, மகேஷ் சோமபாய் தேசாய், ஜிமிஷ் ஜிதேந்திரபாய் சோனி, அமுல் ககாபாய் தேசாய், அரிஃப் குலாம்முஷ்தபா ஷைக் மற்றும் பிரவீன்பாய் ததூஜி தகோர் ஆகிய நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.