மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

வாட்ஸ்-அப்: இனி ஸ்டிக்கர் ஒட்டலாம்!

வாட்ஸ்-அப்: இனி ஸ்டிக்கர் ஒட்டலாம்!

அதிவேக தகவல் மற்றும் கருத்து பரிமாற்றத்துக்கு உதவும் அப்ளிகேஷன்களில் ஒன்றான வாட்ஸ்-அப் மூலம், இனி நண்பர்களுக்கு ஸ்டிக்கர் அனுப்பி கொண்டாடலாம். சில வாரங்களில் வெளியாகவிருக்கும் புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்-அப் இந்த வசதியை அறிமுகப்படுத்துகிறது.

சமூக வலைதள அப்ளிகேஷன்களில் வாட்ஸ்-அப் முக்கியமானது. மற்ற அப்ளிகேஷன்கள் அதிக இடம் மற்றும் அதிக டேட்டாக்களைப் பயன்படுத்தி, பயனாளர்களை சோதித்துக்கொண்டிருந்தபோது, சூப்பர் ஹீரோ போல குறைந்த டேட்டா பயன்பாட்டில் அதிவேகமாக தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய விதத்தில் வாட்ஸ்-அப் வந்து சேர்ந்தது. அறிமுகமானது முதலாக ஒவ்வொரு அப்டேட்டிலும் ஏதாவது புதிய கட்டத்துக்கு தன்னை இடம் மாற்றிக்கொண்டிருந்த வாட்ஸ்-அப் தற்போது ஸ்டிக்கர் உலகத்துக்குள்ளும் சென்றிருக்கிறது.

ஸ்டிக்கர் அறிமுகப்படுத்துவதால் என்ன மாறிவிடப்போகிறது என வாட்ஸ்-அப் செய்யும் புது முயற்சியை கேலி பேசும் மற்ற அப்ளிகேஷன்களும்கூட இந்த ஸ்டிக்கர்களை தினமும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. முதன் முதலில் ஸ்டிக்கரை அறிமுகப்படுத்திய ‘லைன்(LINE) அப்ளிகேஷன் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான டாலர்களை அதன்மூலம் லாபம் பார்த்து வருகிறது. அத்துடன், உலகம் முழுவதுமுள்ள ஸ்டிக்கர் டெவலப்பர்கள் புதிய ஸ்டிக்கர்களை உருவாக்கி அவற்றை பல அப்ளிகேஷன்களில் சேர்க்கின்றனர். இதன்மூலம், அதிக பணம் செலவு செய்யாமலேயே தனது அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவர்களை அந்த நிறுவனங்கள் பொழுதுபோக்குக்கு ஆட்படுத்துகின்றன. இதுவே ஸ்டிக்கர் பயன்பாட்டிற்கு வாட்ஸ்-அப் இறங்கியதன் பின்னணி.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018