மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சென்னை: மின்சார ரயிலில் ஆயுத பூஜை!

சென்னை: மின்சார ரயிலில் ஆயுத பூஜை!

சென்னை மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடத்தியதற்காக, கல்லூரி மாணவர்கள் 15 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

‘பஸ் டே’ என்ற பெயரில் பேருந்தில் கொண்டாட்டத்தை அரங்கேற்றுவது கல்லூரி மாணவர்களின் வழக்கம். தமிழகமெங்கும் உள்ள பல நகரங்களில் கல்லூரி மாணவர்கள் இதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு கொண்டாடுகையில், வேறு கல்லூரி மாணவர்களுடன் வாக்குவாதம் மற்றும் தகராறில் ஈடுபடுவதும் தொடர்ந்து வருகிறது. சென்னை மாநகரைப் பொறுத்தவரை, பல்வேறு வழித்தடங்களில் கல்லூரி மாணவர்களின் பேருந்து தினக் கொண்டாட்டத்துக்குக் காவல் துறையினரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்தைப் போலவே, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்களில் பலர் மின்சார ரயிலையும் பயன்படுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு – தாம்பரம் – சென்னை கடற்கரை, திருவள்ளூர் – சென்ட்ரல், கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கங்களில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். ஆவடி வட்டாரத்தில் சில மாணவர்கள் ரயிலில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வலம்வந்தது சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 25) சென்னை சென்ட்ரல் – திருத்தணி இடையே செல்லும் மின்சார ரயிலில் சில கல்லூரி மாணவர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ரயிலின் முகப்பில் ஏறி பேனர் கட்ட முயன்றனர். இதனைப் பார்த்த ரயில்வே போலீசார் அவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 15 மாணவர்களும் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள கல்லூரியொன்றைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் நிலையத்துக்குள் வந்தபோது, இந்த மாணவர்கள் தாரை தப்பட்டை போன்ற வாத்தியங்களை இசைத்ததாகப் பயணிகள் சிலர் குற்றம்சாட்டினர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018