நிதிப் பற்றாக்குறை: தடுமாறும் இந்தியா!


இந்த நிதியாண்டுக்கான இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கில் ஆறு மாதங்களிலேயே 95.3 சதவிகிதம் அளவு எட்டப்பட்டுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நடப்பு 2018-19 நிதியாண்டில் இந்திய அரசின் செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த முழு ஆண்டுக்கான செலவு மதிப்பீட்டில் 53.4 சதவிகிதம் அளவு செலவிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் செலவுகளின் அளவு 53.5 சதவிகிதமாக இருந்தது. செலவுகள் சற்று குறைவுதான் என்றாலும் அரசின் வருவாய் எதிர்பார்த்தபடி இருக்கவில்லை. இதனால் அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசின் வருவாய் பட்ஜெட் இலக்கில் 40.6 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் அரசின் வருவாய் அளவு வெறும் 39 சதவிகிதம் மட்டுமே.