மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

18 பேரை ஏற்றுக்கொள்வது குறித்து தம்பிதுரை

18 பேரை ஏற்றுக்கொள்வது குறித்து தம்பிதுரை

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18பேரை அதிமுகவில் இணைத்துக்கொள்வது குறித்து தலைமைக் கழகம் முடிவு செய்யும் என்று குறிப்பிட்ட தம்பிதுரை, “அதிமுகவிற்கு விசுவாசமாக, உண்மையோடு பணியாற்றினால் யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லி மயூர்விஹார் கரோலியில் டெல்லி தமிழ் கல்வி சங்கத்தின் பள்ளியில் புரட்சி தலைவி அம்மா பிளாக் என்கிற கட்டடத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 26) காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். விழாவில் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரையிடம் 18பேரும் அதிமுக திரும்பினால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “ அதிமுகவில் யார் வேண்டுமானாலும் இணையலாம். யாரை சேர்ப்பது என்பது குறித்து தலைமைக் கழகம்தான் முடிவு செய்யும்.யார் வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அதிமுகவிற்கு விசுவாசமாக, உண்மையோடு பணியாற்றினால் யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வோம்.

இடைத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். எந்த நேரத்தில் தேர்தலை அறிவித்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது. 19 தொகுதிகளில் இரட்டை இலைச் சின்னத்தில்தான் வெற்றிபெற்றோம். இடைத் தேர்தலில் திருவாரூரைச் சேர்த்து 20 தொகுதிகளிலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம்” என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018