மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

நூற்றாண்டு விழா பேனர்: ஆட்சியருக்கு உத்தரவு!

நூற்றாண்டு விழா பேனர்: ஆட்சியருக்கு உத்தரவு!

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் சாலைகளில் பேனர் வைத்தது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017 டிசம்பர் 3ஆம் தேதியன்று கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்காக பிரம்மாண்ட பேனர்களும் அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டன. கோவை விமான நிலையத்திலிருந்து வஉசி மைதானம் வரை அலங்கார வளைவுகளும் பேனர்களும் அமைக்கப்பட்டன. இதனால் மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. சவுக்குக் கட்டைகளால் அமைக்கப்பட்ட வளைவொன்றின் மீது மோதி, ரகுபதி என்ற பொறியாளர் உயிரிழந்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, அனுமதி இல்லாமல் பேனர்கள் வைப்பதனால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டி கோவை சிங்காநல்லுர் திமுக எம்எல்ஏ கார்த்திக், உரிய அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தத் தவறிய கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று கோரியிருந்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018