மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

கேதர் ஜாதவ் எழுப்பிய கேள்வி!

கேதர் ஜாதவ் எழுப்பிய கேள்வி!

இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் அதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார் இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ்.

இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. இதில் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிந்த நிலையில் அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. புவனேஷ்வர் குமார், பும்ரா இதில் புதிதாக இடம்பெற்றனர்.

இந்நிலையில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் கேதர் ஜாதவ். டைம்ஸ் ஆஃப் இண்டியா ஊடகத்திற்கு நேற்று (அக்டோபர் 25) அவர் அளித்த பேட்டியில், “ மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான அடுத்த மூன்று போட்டிகளுக்கான அணித் தேர்வு குறித்து எந்தவித கலந்துரையாடலும் என்னிடம் மேற்கொள்ளவில்லை. என்னை ஏன் அணியில் இணைக்கவில்லை எனும் காரணம் தெரியவில்லை. காரணத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். நான் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவுள்ளேன்” என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018