மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

கடை ஊழியர்கள் அமர்ந்து பணியாற்றலாம்!

கடை ஊழியர்கள் அமர்ந்து பணியாற்றலாம்!

கேரளாவில் துணிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை பார்க்கும் அனுமதியை வழங்கும் வகையில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

துணி, நகைக் கடைகள் மற்றும் உணவகங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்காருவதற்கு அனுமதி கிடையாது. வாடிக்கையாளர் இல்லையென்றாலும், வேலை முடியும் வரை ஊழியர்கள் நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும். அவர்களது வேலை நேரங்களில் கழிவறைக்குச் செல்வதற்கு கூட அனுமதி கிடைப்பதில்லை. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், நாடெங்குமுள்ள விற்பனை நிலையங்களில் இவை நடைமுறையில் உள்ளன என்பதுவே உண்மை.

இதில் மாற்றம் உண்டாக்கும் நோக்கில், பணி நேரத்தில் உட்காரவும் ஒய்வெடுக்கவும் அனுமதிக்கக் கோரி, கேரளாவைச் சேர்ந்த துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 1960ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘கேரளக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சட்டத்தில் தொழிலாளிகளுக்குச் சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் அவசரசட்ட ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த சட்டம் இன்று (அக்டோபர் 26) முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய சட்ட மசோதாவின்படி, வேலை நேரங்களில் உட்காருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இரவு நேர வேலை அளிக்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட குழுவில் 2 பேர் பெண்களாக இருக்க வேண்டும். இரவுப் பயண வசதியை நிறுவனமே செய்து தர வேண்டும். வாரத்தில் ஒருநாள் கண்டிப்பாக முழுமையான விடுப்பு தர வேண்டும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018