கடல் உணவு ஏற்றுமதி: சாதகமும் பாதகமும்!


அமெரிக்காவுக்கான கடல் உணவு விநியோகத்தால் இந்தியாவின் வர்த்தகம் சீராகவுள்ளது.
தரநிலைச் சோதனைகளால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி சுருங்கிக் கொண்டே போகிறது. ஆனால் அமெரிக்காவுக்கான விநியோகம் சீராக உள்ளதால் ஒட்டுமொத்த தாக்கம் சரிகட்டப்பட்டுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் கடல் உணவுகளை வாங்குவதில் ஐரோப்பிய ஒன்றியமே மிகப் பெரிய வாடிக்கையாளராக இருந்தது. முக்கியமாக இறால் மீன்களே அதிகம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த கடல் உணவு ஏற்றுமதியில் இறால்களின் பங்கு மட்டும் 35 விழுக்காடாக இருந்தது. ஆனால் இப்போதோ 16 விழுக்காடாகக் குறைந்துவிட்டது.