மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

பாதுகாப்பு வசதியோடு பட்டாசு விற்கலாம்!

பாதுகாப்பு வசதியோடு பட்டாசு விற்கலாம்!

சென்னை தீவுத் திடலில் பட்டாசுக் கடைகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திய பின்னர், அங்கு பட்டாசு விற்பனையைத் தொடங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எம்.முனியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு விற்பனைக்காகக் கடைகள் டெண்டர் விடப்படும். இதற்கான வழிமுறைகளை உருவாக்கி, சென்னை உயர் நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில், தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கான டெண்டர் எடுத்தவர்கள் தற்காலிகக்கடைகளை அமைக்க சென்னை காவல் துறை ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். தீப்பிடிக்காத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் கடைகள் அமைக்கப்பட வேண்டும். விபத்து ஏற்பட நேர்ந்தால் உடனடியாக வெளியேறும் வகையில் அவசர வழி, ஆம்புலன்ஸ் வசதி, முதலுதவி கவுண்டர்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கடைகள் அமைக்கப்படவுள்ள தீவுத் திடலின் மற்றொரு பக்கம் பொருட்காட்சி, ஹோட்டல்கள் போன்றவைகள் உள்ளன. இந்த இடத்திலிருந்து பட்டாசு விற்பனைக்காக ஒதுக்கப்படும் இடத்திற்குக் குறைந்தது 70 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். இதைத் தீயணைப்பு துறை அதிகாரிகளும், சுற்றுலாத் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து, அதன் பிறகு அனுமதி அளிக்க வேண்டும்.

ஆனால், இந்த விதிமுறைகள் எதையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்காமல் பட்டாசுக் கடைகளுக்குச் சென்னை மாநகராட்சி, காவல் துறை, தீயணைப்புத் துறை, சுற்றுலாத் துறை, மற்றும் வெடிபொருள் தடுப்புத் துறைஅதிகாரிகள் அனுமதி அளித்து வருகின்றனர். இதனால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் 19ஆம் தேதி முதல் 20 நாட்கள் வரை தீவுத் திடலில் பட்டாசுக் கடைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக் கோரி, கடந்த செப்டம்பர் மாதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உரிய பாதுகாப்பு வழிமுறைகளின்படி பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (அக்டோபர் 26) நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018