மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

வேகமான வளர்ச்சியில் நிலக்கரி இறக்குமதி!

வேகமான வளர்ச்சியில் நிலக்கரி இறக்குமதி!

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 35 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

உள்நாட்டில் நிலக்கரிக்கான தேவை அதிகரித்ததின் காரணமாக நிலக்கரி இறக்குமதி கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இக்காலாண்டில் 35 சதவிகித உயர்வுடன் மொத்தம் 42.7 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதேபோல, இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் இந்தியா மொத்தம் 124.6 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இறக்குமதியை விட 20 சதவிகிதம் கூடுதலாகும்.

பிரதமர் நரேந்திர மோடி அரசானது வர்த்தகப் பற்றாக்குறை தொடர்பான சர்ச்சைகளைச் சந்தித்துவரும் வேளையில், நிலக்கரி இறக்குமதி அதிகரித்திருப்பது மோடி அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மோடி அரசு முயற்சி செய்து வந்தாலும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதியையே பெருமளவில் சார்ந்திருக்கும் சூழல் நிலவுகிறது. நிலக்கரி இறக்குமதியைப் பொறுத்தவரையில் சென்ற 2017-18 நிதியாண்டில் இந்தியா மொத்தம் 18.9 பில்லியன் டாலர் மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட மதிப்பை விட 3 சதவிகிதம் அதிகமாகும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018