மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

திருப்பதியில் பிளாஸ்டிக் தடை!

திருப்பதியில் பிளாஸ்டிக் தடை!

திருப்பதியில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்படுகிறது என்று திருப்பதி திருமலை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடெங்கும் பல இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க, கடந்த அக்டோபர் 2ஆம் தேதியன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதி நகராட்சி முடிவு செய்தது.

50 மைக்ரானுக்கும் கீழுள்ள பிளாஸ்டிக் பைகள், 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள், டீ மற்றும் காபி அருந்தப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் கப்கள் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கக் கோரி நகராட்சி அதிகாரிகளுடன் கோயில் நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்பு, திருமலையில் உள்ள உணவகம் மற்றும் கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் கலந்துரையாடினர். கற்கண்டு, பேரீச்சம்பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் தாள்களில் சுற்றி விற்பதைத் தவிர்க்க வேண்டும்.

டீ, காபி போன்றவற்றுக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது. இது குறித்து பக்தர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாற்று ஏற்பாடு செய்யும் வரை, லட்டு கவர்களை மட்டும் பயன்படுத்த நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018