மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

விஸ்வாசம்: இசை இங்கேயிருந்து வருகிறது!

விஸ்வாசம்: இசை இங்கேயிருந்து வருகிறது!

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

விவேகம் படத்தை அடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் விஸ்வாசம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். விஜய்க்கு தமிழன், ஜில்லா என ஏற்கெனவே இசையமைத்துவிட்டார் இமான். சொல்லப்போனால் இமான் அறிமுகமானதே விஜய் நடித்த தமிழன் படத்துக்கு இசையமைத்ததன் வாயிலாகத்தான்.

விஜய் படத்துக்கு இசையமைத்துவிட்டதால் அஜித் படத்துக்கு அவர் எப்போது இசையமைப்பார் என்னும் கேள்வி இயல்பாகவே இருந்தது. இந்த நிலையில்தான் முதன்முறையாக அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் படத்தில் பணியாற்றி வருகிறார் டி.இமான். முதன்முறையாக இணைந்துள்ளதால் படத்தின் இசை மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமத்தை லஹரி மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம், “விஸ்வாசத்தின் இசையை வழங்குவதை மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் கருதுகிறோம்” எனக் கூறியுள்ளது.

அஜித் - சிவா கூட்டணியில் உருவான வீரம் பட ஆடியோ உரிமையை ஜங்லீ மியூஸிக்கும், வேதாளம் பட ஆடியோ உரிமையை சோனி மியூஸிக் இண்டியாவும், விவேகம் பட ஆடியோ உரிமத்தை சோனி நிறுவனமும் ஏற்கெனவே வாங்கியிருந்தது நினைவிருக்கலாம்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018