மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

நீரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்!

நீரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்!

ஹாங்காங்கில் உள்ள ரூ.255 கோடி மதிப்பிலான நீரவ் மோடியின் சொத்துகளை அமலாக்கத் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டே தப்பிச்சென்ற நீரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் ஒருபுறம் நடந்துவரும் நிலையில், நீரவ் மோடியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சொத்துகளை அமலாக்கத் துறையினர் கைப்பற்றி வருகின்றனர். அதன்படி, அக்டோபர் 24ஆம் தேதி ஹாங்காங்கில் நீரவ் மோடிக்குச் சொந்தமாக இருந்த ரூ.255 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் சொத்துகள் அமலாக்கத் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சொத்துகளை முடக்க, பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமலாக்கத் துறையினர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘துபாயில் நீரவ் மோடிக்குச் சொந்தமாக இருந்த இந்த உடைமைகள் யாவும் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் நீரவ் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனத்துக்கு இந்தச் சொத்துகள் மாற்றப்பட்டுள்ளன. லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகை, வைரம் உள்ளிட்ட ரூ.255 கோடி மதிப்பிலான அந்தச் சொத்துகள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018