மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சபரிமலை: 1,400 பேர் கைது!

சபரிமலை: 1,400 பேர் கைது!

சபரிமலை போராட்டம் தொடர்பாக, இதுவரை 1,400 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, சபரிமலை கோயிலுக்குப் பெண்கள் செல்ல முயன்றனர். ஆனால், பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என இந்து அமைப்புகள், பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் என்று பல தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியதில் செய்தியாளர்கள், சபரிமலைக்கு வந்த பக்தர்கள், போலீசார் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது வாகனங்களைச் சேதப்படுத்தியதாகவும், பெண்களைத் தாக்கியதாகவும் சபரிமலை மற்றும் நிலக்கல், பம்பையில் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அது மட்டுமல்லாமல், சந்தேகத்தின்பேரில் 210 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சந்தேக நபர்களின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு, அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த தகவல்களை அனைத்து மாவட்டத் தலைமையகத்துக்கும் அனுப்பிவைத்து, அவர்களை அடையாளம் காண சிறப்புக்குழுக்களை அமைத்துள்ளதாக கேரள மாநில டிஜிபி லோக்நாத் பெஹரா தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018