மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

2ஜி மேல்முறையீடு: அமலாக்கத் துறை மனு ஒத்திவைப்பு!

2ஜி மேல்முறையீடு: அமலாக்கத் துறை மனு ஒத்திவைப்பு!

2ஜி வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை அடுத்தாண்டு பிப்ரவரி 7ஆம் தேதி விசாரிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி கடந்த டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் மார்ச் 19ஆம் தேதியும் சிபிஐ சார்பில் மார்ச் 20ஆம் தேதியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி எஸ்.பி. கார்க் உத்தரவிட்டார்.

சிபிஐ மேல்முறையீட்டு மனுவைக் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நஜிம் வஜிரி, “சிபிஐ மேல்முறையீட்டு மனுவுக்குப் பதில் அளிக்க ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.

இதற்குப் பதில் அளிக்கவும், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் ஆவணங்களை டிஜிட்டல்படுத்தி அவற்றை எதிர் மனுதாரர்களுக்கு அளிக்கவும் சிபிஐக்கு ஆறு வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கு விசாரணை 2019, பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று அறிவித்தார்.

இந்த நிலையில், அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனு நேற்று (அக்டோபர் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவை சிபிஐ மனு உடன் சேர்த்து விசாரிப்பதாகத் தெரிவித்த நீதிபதி, விசாரணையை 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018