மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சர்ச்சையைக் கிளப்பிய வீரர்கள் தேர்வு!

சர்ச்சையைக் கிளப்பிய வீரர்கள் தேர்வு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் தேர்வு தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகக் கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று (அக்டோபர் 25) அறிவிக்கப்பட்டது. அந்தப் புதிய பட்டியலில் கடந்த இரு போட்டிகளிலும் விளையாடிய வீரர்கள் அனைவரும் இடம்பெற்ற நிலையில் மொஹமது ஷமி மட்டும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை நீக்கிவிட்டு இவரைக் காட்டிலும் மோசமாக விளையாடிய உமேஷ் யாதவை அணியில் தக்கவைத்த செயல் தற்போது ட்விட்டரில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இந்தத் தொடரில் மொஹமது ஷமி, உமேஷ் யாதவ் இருவரது செயல்பாடுமே பெரிய அளவில் இல்லை. கடந்த இரண்டு போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 300க்கும் மேற்பட்ட ரன்களை எளிதில் கடந்தது. இதில் இந்த இரு வீரர்களின் செயல்பாட்டைக் கணக்கிட்டால் மொஹமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 7.00 என்ற எகானமியைக் கொண்டுள்ளார். ஆனால், உமேஷ் யாதவோ 7.10 எகானமியைக் கொண்டு 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018