மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

27 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனு: ஜனாதிபதி நிராகரிப்பு!

27 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனு: ஜனாதிபதி நிராகரிப்பு!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேரைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆட்சிமன்றக் குழுவுடன் கூடிய ‘ரோகி கல்யாண் சமிதி’ என்ற அமைப்பைக் கடந்த 2009ஆம் ஆண்டு மாநில அரசு உருவாக்கியது. இந்த அமைப்புக்கு உள்ளூர் எம்.எல்.ஏ.க்களே தலைவராகச் செயல்படுவர். அந்த வகையில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் 27 எம்.எல்.ஏ.க்கள் இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் விபோர் ஆனந்த் என்பவர் புகார் அளித்தார். மனுவை நடைமுறை விதிகளின்படி தேர்தல் ஆணையம் பரிசீலனைக்கு ஜனாதிபதி அலுவலகம் அனுப்பி வைத்தது. இதையடுத்து 27 எம்.எல்.ஏ.க்களும் 2016ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், 27 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய விபோர் ஆனந்த்தின் மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அக்டோபர் 15ஆம் தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரோகி கல்யாண் சமிதியின் தலைவர் பதவி ஆதாயம் தரும் பதவியல்ல என்று தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்குக் கடந்த ஜூலை 10ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது என்றும் அதன் அடிப்படையிலேயே ஜனாதிபதி மனுவை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆதாயம் தரும் இரட்டை பதவியில் இருப்பதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஜனவரி 21ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தார். இதை எதிர்த்து 20 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் தகுதி நீக்கம் செல்லாது எனக் கடந்த மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018