நெட்வொர்க் துறை: புகையிலைக்கு ஈடாக வரி!


இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் புகையிலை தொழில் துறைக்கு விதிக்கப்படுவது போல அளவுக்கு அதிகமான வரிகள் விதிக்கப்படுவதாக ஏர்டெல் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
சமீப காலமாகவே இந்தியாவின் தொலைத் தொடர்புச் சந்தையில் போட்டிகளும் வருவாய் இழப்புகளும் அதிகரித்துள்ளன. ஜியோவின் வருகையில் இத்துறையே ஆட்டம்கண்டுள்ளது. ஜியோவுக்குப் போட்டியாகக் கட்டணக் குறைப்பை மேற்கொள்வதால் நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மறுபுறம் அலைக்கற்றைக் கட்டணம், உரிமங்களுக்கான கட்டணம், அதிகப்படியான வரி போன்றவையும் நெட்வொர்க் நிறுவனங்களைப் பாதிக்கின்றன. இத்துறையில் அரசு தரப்பிலிருந்து அதிகளவு வரி விதிக்கப்படுவதாக இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் தெரிவித்துள்ளது.