மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

ஒடியன்: தீவிரம் காட்டும் சாம்.சி.எஸ்

ஒடியன்: தீவிரம் காட்டும் சாம்.சி.எஸ்

நடிகர் மோகன் லால் நடிப்பில் உருவாகி வரும் ‘ஒடியன்’ திரைப்படத்துக்கான பின்னணி இசையில் தீவிரம் காட்டி வருகிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.

விக்ரம் வேதா திரைப்படத்தில் பின்னணி இசை பேசப்பட்டதைத் தொடர்ந்து தமிழில் பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இன்னொருபக்கம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘ஒடியன்’ படத்துக்கும் இவர்தான் பின்னணி இசையமைக்கிறார்.

அந்த விதமாக மலையாளத்தில் இவரது முதல் என்ட்ரியே அசத்தலாக அமைந்துவிட்டது. விளம்பரப்பட இயக்குநரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் பின்னணி இசைக்கோர்ப்பு பணியில் தீவிரமாக இருக்கிறார் சாம் சி.எஸ். பின்னணி இசையில் மிரட்டிய புலி முருகன் படத்துக்குப்பின் மோகன் லாலுக்குப் பெயர் சொல்லும்விதமாக இந்த ஒடியன் மிக பிரமாண்டமாக உருவாகிவருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் கவனத்தில் வைத்து இசையமைத்து வருகிறாராம் சாம் சி.எஸ்.

இந்தப் படத்தில் இருவேறு தோற்றங்களில் நடித்திருக்கும் மோகன் லால், இளமையான தோற்றத்துக்காக தன் எடையை வெகுவாகக் குறைந்திருந்தார். மோகன் லாலுடன் நடிகை மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ் போன்றவர்களும் உள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ‘இருவர்’ படத்திற்குப் பிறகு ‘ஒடியன்’ படத்தில்தான் மோகன் லாலும் பிரகாஷ்ராஜூம் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018