மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 அக் 2018

மீடூ புகார்: விசாரணைக் குழு விரைவில் நியமனம்!

மீடூ புகார்: விசாரணைக் குழு விரைவில் நியமனம்!

பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ட்விட்டர் மூலம் நடத்திவரும் #MeToo புகார் தொடர்பாக, மூத்த நீதிபதி மற்றும் சட்ட வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இன்று (அக்டோபர் 12) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பெண்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்காக, பாதிக்கப்பட்ட பிரபலங்கள் #MeToo (நானும் பாதிக்கப்பட்டேன்) என்னும் பெயரில் ட்விட்டரில் பிரச்சாரம் மேற்கொண்டனர். சமீபத்தில், இது தொடர்பான சர்வே ஒன்று வெளியானது.

சிலநாட்களாக, இந்தியாவிலும் #MeToo ஹேஸ்டேக்கில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேக் மூலம் பாலிவுட் நடிகர் நானே படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய புகார் பலரது கவனிப்புக்கு உள்ளானது. இதே போன்று, முன்னாள் பத்திரிகையாளரும் பாஜகவின் மாநிலங்களவை எம்பி மற்றும் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். விளையாட்டு வீரர், வீராங்கனைகள், திரையுலகினர் என்று பலர் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பின்னணிப் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்துப் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பாடகர் கார்த்திக் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. “இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? எம்.ஜே.அக்பர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜிநாமா செய்ய வேண்டும்” என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதே கோரிக்கையை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ட்விட்டர் மூலம் நடத்திவரும் #MeToo பிரசாரம் தொடர்பாகப் பொது விசாரணை மேற்கொள்ளவும், இதற்காக 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்கவும், மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, இன்று (அக்டோபர் 12) மத்திய அமைச்சர் மேனகா காந்தி பேசியுள்ளார்.

“பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்களின் வலியையும், வேதனையையும் என்னால் உணர முடிகிறது. அவர்கள் கூறி வரும் குற்றச்சாட்டுகளை நம்புகிறேன். இந்த புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அந்த குழு சட்டரீதியான ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளை முன்வைக்கும்” என்று அவர் அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

வெள்ளி 12 அக் 2018