மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 அக் 2018

பெட்ரோலைத் தொடர்ந்து விமான எரிபொருள்!

பெட்ரோலைத் தொடர்ந்து விமான எரிபொருள்!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்ததைத் தொடர்ந்து தற்போது விமான எரிபொருளுக்கான கலால் வரியையும் மத்திய அரசு குறைத்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. அதோடு, இவற்றுக்கான விலையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் மானியம் வழங்க வேண்டும் எனவும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டது. இதன்படி, பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.2.50 வரையில் குறைந்தது. இதேபோல விமான எரிபொருளுக்கான விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தற்போது அதற்கான கலால் வரியை 11 சதவிகிதமாகக் குறைத்துள்ளது மத்திய அரசு.

வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 11ஆம் தேதி முதல் விமான எரிபொருளுக்கான கலால் வரி ஏற்கெனவே இருந்த 14 சதவிகிதத்திலிருந்து 11 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிக் குறைப்புக்குப் பிறகு, தற்போதைய நிலையில் தேசியத் தலைநகர் டெல்லியில் விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டர் ரூ.74,567 ஆக உள்ளது. ஒரு லிட்டருக்குக் கணக்கிட்டால் டெல்லியில் விமான எரிபொருள் விலை ரூ.74.56 மட்டுமே. அதாவது பெட்ரோல், டீசல் விலையை விட விமான எரிபொருள் விலை அங்கு குறைந்துள்ளது. சென்ற ஜூலை மாதத்திலிருந்து விமான எரிபொருளின் விலை டெல்லியில் 9.5 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

வியாழன் 11 அக் 2018