மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

திமுக பொதுக்கூட்டங்கள்: இடைக்கால அனுமதிக்கு மறுப்பு!

திமுக பொதுக்கூட்டங்கள்: இடைக்கால அனுமதிக்கு மறுப்பு!

தமிழக அரசைக் கண்டித்து திமுக நடத்தவுள்ள பொதுக்கூட்டங்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது ஸ்டாலின் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இதுதொடர்பாக திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மக்கள் நடத்தி வரும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் கண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்திட கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. அக்டோபர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் முன்னணித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.

இந்த நிலையில், “பொதுக் கூட்டங்களுக்கு காவல் துறையிடம் அனுமதி கோரி கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 81 மனுக்கள் கொடுக்கப்பட்ட நிலையில் இரண்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது” என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று (அக்டோபர் 1) விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் ஆஜராக வழக்கறிஞர் வில்சன், ‘பொதுக் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று டிஜிபி வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில்தான் இரண்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 79 மனுக்களும் நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்” என்று வாதத்தை எடுத்து வைத்தார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, நிராகரிக்கப்பட்டதற்கான உத்தரவை எதிர்த்து நீங்கள் வழக்கு தொடரவில்லை. அப்படியிருக்க இந்த மனுவை விசாரித்து எப்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் 81 இடங்களில் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும் தாக்கல் செய்ய திமுக தரப்பிற்கு உத்தரவிட்டார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

திங்கள் 1 அக் 2018